செய்திகள் :

''என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே சொத்து வரியை மாற்றிவிட்டார்கள்'' - மேயர் பிரியா கடும் தாக்கு

post image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக மக்கள் கொந்தளிக்கின்றனர். இது சம்பந்தமாக விளக்கம் அளித்திருக்கும் சென்னை மாநகராட்சி, ''சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்கிற தகவலில் உண்மை இல்லை. சொத்து வரி மறுமதிப்பீடு மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது'' எனக் கூறியிருக்கிறது.

Chennai Corporation
Corporation of Chennai

இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியாவிடம் பேசினோம், ''மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளாகவே இந்த முடிவை எடுத்துவிட்டனர்'' எனக் குற்றஞ்சாட்டுகிறார்.

மேயர் பிரியா கூறியதாவது, ''இது மக்களை அவதிக்குள்ளாக்கும் செயல். சொத்து வரியை மறுமதிப்பீடு செய்கிறோம் என்ற பெயரில் அதிகமான தொகையை மக்கள் தலையில் கட்டியிருக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது மிக முக்கியமான வருவாய் ஆதாரம். அது சம்பந்தமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டுமெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

மாமன்றத்தில் சொத்து வரி குறித்து கவுன்சிலர்கள் மத்தியில் விவாதித்து ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே அதிகாரிகள் தன்னிட்சையாக முடிவெடுத்திருக்கிறார்கள். அதிகாரிகள் முடிவை எடுத்து அறிவித்துவிட்டுதான் மேயரான என்னிடமே தகவல் சொல்கின்றனர்.

இது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் செயலே. இதைக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும். இந்த மாத மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இதைக் பெரிய பிரச்னையாக எழுப்புவார்கள்'' என்கிறார்.

சொத்துவரியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதில் புகார் இருப்பின் மண்டல அலுவலகங்களில் அடுத்த 15 நாட்களுக்குப் புகாரளிக்கலாம் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஈரோடு: எரிசாராய ஆலை அனுமதிக்கு எதிர்ப்பு; மேளதாளத்துடன் சீர்வரிசையில் புகார் மனு! | Photo Album

ஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எர... மேலும் பார்க்க

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026: ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ சென்னையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில... மேலும் பார்க்க

'ஷாநவாஸை நீக்குக' - திருமாவை அழுத்தும் சிறுத்தைகள் டு ஜெகதீஸை தூண்டிவிடும் கும்பல் |கழுகார்

திருமாவை அழுத்தும் சிறுத்தைகள்!ஷாநவாஸை நீக்குங்க...த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றிருக்கும் நிலையில், 'தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் மறைமுக ஆட்சி நடக்கிறது' எனப் பேசி வருகிறார், வி.சி.க-வின் முதன்மை... மேலும் பார்க்க

FCRA மசோதா: மீண்டும் கையில் எடுத்த மத்திய அரசு! எதிர்ப்பு எழுவது ஏன்?

ஆகஸ்ட் 12 ஆம் நாள் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 'கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம்' FCRA சோதாவை ஒப்படைப்பதற்கான தீர்மானத்தை உள்துறை இ... மேலும் பார்க்க

'சிங்கப்பூர் பயணத்துக்க அப்புறம்தான்..!' அவையில் பம்மும் எ.வ.வேலு; அதிருப்தியில் திமுக MLA க்கள்?

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. செப்டம்பர் 8 வரை அவை நடக்கவிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்திருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் சீனியரும் கொறடாவுமான எ.வ.வ... மேலும் பார்க்க

₹ 1.5 லட்சம் லஞ்சமா? முதல்வர் முன் அழுத தேக்வாண்டோ மாணவி; பின்னர் வீடியோவில் வேறு விளக்கமா?

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற டேக்வாண்டோ (Taekwondo) வீராங்கனை ஒருவர், சர்வதேசப் போட்டியில் பங்கேற்க ரூ.1.5 ... மேலும் பார்க்க