செய்திகள் :

பறக்கும் கார்: பத்தே நிமிடங்களில் 40 கி.மீ கடக்கலாம்; உத்தரகாண்ட் இளைஞரின் அசத்தல் முயற்சி!

post image

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி தம்தா உருவாக்கிய ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ (HAPIDA SKYNeX) என்ற மின்சாரப் பறக்கும் கார் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

பொறியியல் மற்றும் விமானத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ரவி தம்தா, தனது குழுவினருடன் இணைந்து இந்தப் பறக்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளார். பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் முயற்சியின் விளைவாக இத்திட்டம் உருவாகியுள்ளது.

முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் இவ்வாகனம், செங்குத்தாக மேலே பறந்து தரையிறங்கும் eVTOL (Electric Vertical Take-Off and Landing) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அல்மோரா பகுதியில் நடைபெற்ற இதன் முதல் சோதனை இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் ஒரு நிமிடம் வானில் பறந்த இவ்வாகனம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

மலைப்பகுதிகளில் நிலவும் போக்குவரத்துச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தைச் சாலை வழியாகக் கடக்க ஒன்றரை மணி நேரம் வரை ஆகும் நிலையில், இந்தப் பறக்கும் வாகனத்தின் மூலம் அதே தூரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் கடக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். எனினும், இவ்வாகனம் இன்னும் சோதனைக் கட்டத்தில் மட்டுமே உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அனுமதிகள் பெறப்பட்ட பின்னரே வணிகரீதியில் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் பறக்கும் வாகனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ரவி தம்தாவின் இம்முயற்சி, எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Victor Riparbelli: நோ சொன்ன 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்; இன்று ₹38,000 கோடி AI சாம்ராஜ்யம்!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ChatGPT அறிமுகமாகி Generative AI உலகளவில் பெரும் கவனம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 'Text மட்டும் பயன்படுத... மேலும் பார்க்க

அமெரிக்க வேலையை விட்டுத் திரும்பிய தமிழர்... இந்திய MRI-யால் உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த 'Voxelgrids' என்ற மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹீலியம் இல்லாத 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய தமிழ... மேலும் பார்க்க

`சொல்லாமலேயே வேலை செய்யும் AI'- 24/7 பிண்ணனியில் இயங்கும் Gemini Spark-ஐ அறிமுகப்படுத்திய Google

இதுவரை AI சாட்பாட்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் Gemini Spark Al அதைக் கடந்து, பயனரின் சார்பாகவே செயல்படும் 24 மணி நேர AI ஏஜென்ட் என்ற புதிய AI உதவியாளரை இந... மேலும் பார்க்க

எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்' - எலான் மஸ்க் கணிப்பு

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் 'எல்லாவற்றிற்குமான செயலி' ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக ... மேலும் பார்க்க

உங்கள் Google ஸ்டோரேஜ் பற்றி நீங்கள் அறியாத 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள்: 2026 புதிய விதிகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Kimi K3: AI உலகின் புது பாய்ச்சல்... புதிய Subscription-களை தற்காலிகமாக நிறுத்திய Moonshot - காரணம்?

AI உலகில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ChatGPT-யை உருவாக்கிய OpenAI, Claude-ஐ உருவாக்கிய Anthropic, Gemini-யை உருவாக்கிய Google ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக, சீனாவின் Moonshot AI நிறுவன... மேலும் பார்க்க