செய்திகள் :

"தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?" - காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்

post image

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.

இதில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 19 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

விஜய் தலைமையில் தமிழக எம்.பிக்கள் கூட்டம்
விஜய் தலைமையில் தமிழக எம்.பிக்கள் கூட்டம்

இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் காங்கிரஸ் கட்சியை சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?

தங்கள் Proxy அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த திரு.ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?

த.வெ.க அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?

Fair Delimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து No Delimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?

அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

No Delimitation என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள், Delimitation நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?

தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது PettyPolitics அன்றி வேறல்ல.

நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்" என்று தயாநிதி மாறன் சாடியிருக்கிறார்.

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங... மேலும் பார்க்க

'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.அர்ச்சனா கல்பாத்தி - விஜய்... மேலும் பார்க்க

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைவலியாக மாறி வருகிறார். நெதன்யாகு பேச்சு"ஹமாஸ் உண்மையிலுமே முழுவதுமாக எப்போது ஆயுதமற்று ஆகிறத... மேலும் பார்க்க

`இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள்' - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மன்னார்குடி நிர்வாகி கோரிக்கை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு `வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை முன் வைத்தது திமுக தலைமை. 200 தொகுதிகளில் வெற்றி பெற்றி திமுக ஆட்சியை தக்க வைக்கும் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் உறுதிய... மேலும் பார்க்க