செய்திகள் :

இனி டீனேஜர்களுக்குத் தனி ChatGPT! – ‘Quiet Hours’, ‘Study Mode’ என புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

post image

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.

13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இதில், வழக்கமான ChatGPT வசதிகளுடன் கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் கவனம் ஈர்க்கும் அம்சம் ‘Study Mode’. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக விடை கொடுப்பதற்குப் பதிலாக, பாடத்தை படிப்படியாகப் புரிந்துகொள்ளும் வகையில் ChatGPT வழிகாட்டும். இதனால் கேள்விக்கான விடையை மட்டும் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, பாடத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ‘Quiet Hours’ மூலம் இரவு நேரம் போன்ற குறிப்பிட்ட நேரங்களில் ChatGPT பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். இதை பெற்றோர்கள் நிர்வகிக்கலாம்.

"Sensitive Content-க்கும் கடும் கட்டுப்பாடு"-

டீனேஜர்களுக்கு பொருத்தமற்ற அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு விதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வன்முறை(violence), சுயதீங்கு(self harm), உணவைத் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியத்துக்கு ஆபத்தான பழக்கங்கள் போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும்.

பெற்றோர்கள் குழந்தையின் ஒவ்வொரு ChatGPT உரையாடலையும் பார்க்க முடியாது. ஆனால், தீவிரமான பாதுகாப்பு ஆபத்து கண்டறியப்பட்டால் எச்சரிக்கை வழங்கும் வசதி உள்ளது.

AI-யை பயன்படுத்தும் புதிய தலைமுறைக்கு அறிவு மட்டுமல்ல... பாதுகாப்பும் முக்கியம்! என்ற நோக்கத்தில் இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

`உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - காரைக்குடி அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டிய நாசா விஞ்ஞானி!

13 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய VIGO செயற்கைக்கோள், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.45 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் உயரத்தை நோக்கிப் ப... மேலும் பார்க்க

Makkal Bus: என்ன பஸ்... என்ன ரூட்? - மதுரை மக்களுக்காக கல்லூரி மாணவர் உருவாக்கிய அசத்தல் `செயலி'

மதுரை மாவட்டம், வில்லாபுரம் மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகுல்ராஜ் ஜெயராமன். மதுரை மக்களுக்காக பிரத்யேக நகர்ப்புற பேருந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிபெறு... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

சுஷ்மிதா கிருஷ்ணன்நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக... மேலும் பார்க்க

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வ... மேலும் பார்க்க

ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!

ஸ்டைல், கேமரா, பெர்ஃபார்மென்ஸ் என இன்றைய இளம் தலைமுறையினரின் ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, vivo நிறுவனம் தனது S Series-ன் புதிய மாடலான vivo S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியு... மேலும் பார்க்க

`கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை'- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி!

'ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்' (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்தி... மேலும் பார்க்க