செய்திகள் :

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" - உதயநிதி

post image

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது.

அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்​துறை​யினர் நாட்டுத் துப்​பாக்​கியால் தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்படுகிறது.

இதில், ம‌ரியமங்​கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகத் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.

அதே நேரம் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ``இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்... எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ``கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.

த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தச் சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின்போது, கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்குப் பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருச்சி: "உணவைப் பிடுங்குது, கூரையைப் பிரிக்குது" - குரங்குகளின் தொல்லையால் அல்லலில் கிராம மக்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கிறது 94 கரியமாணிக்கம். தினமும் கொத்து கொத்தாக 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் 94 கரியமாணிக்கம்கிராமத்திற்குள் சுற்றி வருவதாகவும், வீட்டில் உள்ள உணவுப் பொரு... மேலும் பார்க்க

மதுரை பூசாரி காவல் மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக மனைவி குற்றச்சாட்டு; நீதிமன்றம் சொன்னது என்ன?

மதுரை மாநகர் சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சிவனடியார் பரமசிவம். இவர் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் தேதி உயிர... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குஜிலியாம்பாறை வருவாய் கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

"விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயில்"- கேரள முதல்வர் பெருமிதம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் இன்று தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" - முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... சுமூகமாகப் பேச்சுவார்த்தை இருக்கிறது...... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' - திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது. இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவ... மேலும் பார்க்க