செய்திகள் :

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குஜிலியாம்பாறை வருவாய் கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதோடு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதே நேரத்தில் வருகிற 20 ஆம் தேதியன்று குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமியைக் கண்டித்து சிபிஎம் கட்சி தலைமையில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்தப் போராட்டத்தை முடக்குவதற்காகவே தாசில்தார் இந்த மாதிரியான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என சிபிஎம் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சிபிஎம் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “ராவுத்தான்பட்டியில் 1 ஏக்கர் 20 செண்ட் நிலம் பட்டியலின மக்களுக்காகக் கொடுக்கபட்டிருந்தது. இந்த நிலத்திற்கு அருகிலேயே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நந்தகுமார் கட்டுமான பணிகளைச் செய்து வருவதோடு, பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலத்தையும் ஆக்கிரமித்தார்.

இது குறித்து தாசில்தார் அய்யசாமியிடம் புகாரளித்தபோது, ’நீங்கள் வேண்டுமானால் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்” எனத் திமிராகப் பேசியிருக்கிறார்.

திண்டுக்கல் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை கேட்ட தாசில்தார்
திண்டுக்கல் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை கேட்ட தாசில்தார்

இது தொடர்பாக என் கவனத்திற்கு வந்து நானும் கட்சி தோழர்களும் புகாரளிக்க அலுவலகத்திற்கு வந்தபோது, எங்களை வழிமறித்த தாசில்தார் அய்யாசாமி, ’பொதுமக்கள் மட்டுமே உள்ளே வர வேண்டும். மக்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அரசியல் கட்சிகளை எனக்கு பிடிக்காது. இங்கு நீங்கள் வரக்கூடாது’ என எங்களிடமும் திமிராகப் பேசினார். இது தொடர்பாக அங்கேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரவுத்தான்பட்டி  சிபிஎம் கட்சியின் கிளை செயலாளர் ராசுக்குமாரும் பொதுமக்களும், நந்தகுமாரிடம்  ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு முறையிட்டபோது, நந்தகுமார் தரப்பினர் ராசுக்குமாரை அடித்துள்ளனர்.

உடனே ராசுக்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தங்களையும் அடித்து விட்டதாக பொய் புகார் கூறி நந்தகுமார் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். தாசில்தார் நந்தகுமாரைக் கண்டிக்காமல் விட்டதானலேயே பிரச்னை இந்த அளவிற்குத் தீவிரமாகியுள்ளது என்பதால் தாசில்தாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கட்சி சார்பில் அறிவித்திருந்தோம். இதை முடக்குவதற்காகவே அய்யசாமி இப்படியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்” என்றார்.

"விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயில்"- கேரள முதல்வர் பெருமிதம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் இன்று தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" - முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... சுமூகமாகப் பேச்சுவார்த்தை இருக்கிறது...... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' - திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது. இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவ... மேலும் பார்க்க

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் கூடும் 5 மாநில முதல்வர்கள் - எதிர்பார்ப்புகள் என்ன?

நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 19, 20) செங்கல்பட்டு கோவளத்தில் ‘31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது.இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாள் பய... மேலும் பார்க்க

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' - அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் 'கில்லி' சரத், தவெகவினர் அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளி ... மேலும் பார்க்க

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்... உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும், அந்தக் கூட்டநெரிசலுக்கு மத்தியிலும் 'த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்' என திருமா அறிவித்திருப்பதும் பெரு... மேலும் பார்க்க