செய்திகள் :

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

post image

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம், பத்ரகாளியம்மன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் பிரியாவின் அருகே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிச் செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, ஸ்கூட்டரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது, அந்த நபரின் கை அவரது கழுத்துப் பகுதியில் பட்டுள்ளது. ஆனாலும், சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றதால் செயினை பறிக்க முடியாமல், அவர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நந்தகுமார்

இது குறித்து, பிரியா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகேயிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்படி, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது புகளூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நந்தகுமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே இவர் செயின் பறிப்பில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்பது குறித்து தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. த.வெ.க நிர்வாகி ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றதாக போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை ... மேலும் பார்க்க

சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்ப... மேலும் பார்க்க

தருமபுரி: நகைக்காக மாமியாரைக் கொன்று குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி; நண்பர்களுடன் கைது

நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சேலம்:சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் க... மேலும் பார்க்க

பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ​மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, பாளையங்கெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ் (25). இவர் சொந்தமாக ஒலி, ஒளி சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒ... மேலும் பார்க்க