செய்திகள் :

சேலம்:சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

post image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் உதவியை நாடியிருக்கிறார். அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், "நண்பர்களாக உள்ள சக சிறுமிகளின் சகோதரர் உள்ளிட்ட சில இளைஞர்கள் நட்பாக பழக ஆரம்பித்து பீர் உள்ளிட்ட மதுவகைகளை வாங்கிக் கொடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்தார்கள்" என கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக 2 சிறுவர்கள் உட்பட 4 இளைஞர்கள் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குபதிந்து கைது செய்துள்ளனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மேலும் சில இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Child Abuse

இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மகளிர் காவல்துறை அதிகாரி ஒருவர், "13, 15, 16 வயதுடைய மூன்று சிறுமிகள் நட்புடன் இருந்துள்ளனர். குடியிருப்பு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 13 வயது சிறுமியிடம் அறிமுகமான இளைஞர்கள் சிலர் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். 7 நபர்களுக்கு மேல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். 19 வயதுடைய ஆகாஷ், 23 வயதுடைய பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். 2 சிறுவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறோம்" என்றார்.

13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி ஓராண்டுக்கும் மேலாக பல இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ​மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, பாளையங்கெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ் (25). இவர் சொந்தமாக ஒலி, ஒளி சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒ... மேலும் பார்க்க

”படிப்புக்கு பண உதவி செய்வார்” - மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பெண் ஆசிரியர் உட்பட இருவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (38). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். மேலும... மேலும் பார்க்க

குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர், கொலை மிரட்டல்; இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜுமுதீன் என்பவரும் காதலித்து வந்தனர்.இந்தநிலையில், இருவருக்கும் கரு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுல... மேலும் பார்க்க

"சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது" - அடிதடி வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க