செய்திகள் :

சென்னை: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர், கொலை மிரட்டல்; இளைஞர் கைது

post image

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜுமுதீன் என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாதம் முன்பு பிரிந்தனர். ஆனால், அஜுமுதீன், அப்பெண்ணை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, காதலிக்குமாறு கூறி வற்புறுத்தி வந்தார். அதனால் இளம்பெண் மனஉளைச்சலுக்குள்ளாகினர். இதுதொடர்பாக தன்னுடைய குடும்பத்தினரிடமும் கூறினார்.

கைது
கைது

இந்நிலையில்15.08.2026-ம் தேதி தண்டையார்பேட்டை உள்ள டீக்கடை அருகே அப்பெண்ணும் அவரது தோழியும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அஜுமுதீன் அப்பெண்ணிடம் தன்னிடம் மீண்டும் பேசுமாறு கூறியிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண் பேச மறுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இளம்பெண்ணை, தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் அஜுமுதீன்.

இதுகுறித்து அப்பெண், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஜுமுதீனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தன்னை அப்பெண் காதலித்து ஏமாற்றி விட்டதாக அஜுமுதீன் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதையடுத்து அஜுமுதீனை போலீஸார் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுல... மேலும் பார்க்க

"சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது" - அடிதடி வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

"என் மனநிலையைப் பாழாக்கிவிட்டாய்" - தேனிலவில் மாதவிடாய் எனச் சொன்ன மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2023ம் ஆண்டு நிகில் என்பவருடன் திருமணம் நடந்தது. அத்திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அந்தமான் நிகோபார் பகுதிக்கு தேனிலவு சென்றனர். ஆனால் தேனில... மேலும் பார்க்க

விசிக-வினர் சாலை மறியல்; கடக்க முயன்ற இளைஞர் - தாக்கிய போலீஸை திருப்பி அடித்த இளைஞர்; நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் அக்கட்சி மாநாட்டிற்காக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

சிலீப்பர் டிக்கெட்டில் ஏ.சியில் பயணம்: தட்டிக்கேட்ட டி.சி, ரயில்வே பாதுகாவலரை பிளேடால் தாக்கிய நடிகை

மும்பையில் டிவி தொடர்கள், வெப்சீரியஸ்களில் நடித்து வருபவர் அந்தரா பானர்ஜி(31). மும்பை அருகில் உள்ள தானேயில் வசிக்கும் அந்தரா பானர்ஜி, பாந்த்ரா-கங்காநகர் ஆரவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெப் சீரிஸ் ஒன்றின் பட... மேலும் பார்க்க