செய்திகள் :

VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இன்று மாநாடு என்பதைத் தாண்டி, விசிக தொண்டர்கள் இன்னொரு ஹேப்பி நியூஸ் - இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள்.

தவெக அமைச்சரவை விசிக அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும், யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமலே இருந்தார் திருமாவளவன்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

இந்தக் கேள்விக்கான பதில் இன்று கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதே மாதிரி தவெக உடனான கூட்டணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் திருமாவளவன்.

மேலும், உளுந்தூர்பேட்டையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. மேடையிலும் கூட்டம் கூட, திருமாவளவனே திணறிவிட்டார்.

மாநாட்டில் திருமாவளவன் பேசிய முக்கியமானவை...

> தற்போது விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கிறது. வருங்காலத்தில் இது ஆளுங்கட்சியாக மாற வேண்டும்.

> விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழ்த்தேசியத்தில் இணைந்தே பயணிக்கும்.

> இந்த மாநாட்டின் 125 தீர்மானங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்.

> விசிக தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

என்று 5 நிமிடங்களுக்கு உள்ளேயே பேச்சை முடித்துவிட்டார் திருமாவளவன். கட்டுக்கடங்காத கூட்டத்தால் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி என்று விரைவில் பேச்சை முடித்துக்கொண்டார் திருமாவளவன்.

'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு ... மேலும் பார்க்க

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல... மேலும் பார்க்க

`போர் தொடங்கிய காரணம் மாறிவிட்டதா?' ரஷ்யா - உக்ரைன் சண்டை ஏன் தொடர்கிறது?

4 ஆண்டுகள் 5 மாதங்களைக் கடந்துள்ளது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர். இத்தனை நாள்கள் தொடர்ந்தும், இந்தப் போரில் சமாதனம், முடிவு ஆகிய வார்த்தைகளுக்கு இடமில்லாமல் இருக்கிறது. இ... மேலும் பார்க்க

பியூஷ் கோயல் முதல் ஸ்மிருதி இரானி வரை.! - பாஜக-வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளபட்ட அதிரடி மாற்றங்கள்

பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் இங்கே!தேசிய துணைத் தலைவர்கள் (National Vice Presidents)வசுந்தரா ராஜே சிந்தியா – ராஜஸ்தான்தீரத் சிங் ராவத் – உத்தரகண்ட்ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்!

மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படியே சாலை வசதி இருந்தாலும் அவை மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து காணப்படுகிறது. மகாராஷ்டிராவின் சந்திராப... மேலும் பார்க்க