செய்திகள் :

சிலீப்பர் டிக்கெட்டில் ஏ.சியில் பயணம்: தட்டிக்கேட்ட டி.சி, ரயில்வே பாதுகாவலரை பிளேடால் தாக்கிய நடிகை

post image

மும்பையில் டிவி தொடர்கள், வெப்சீரியஸ்களில் நடித்து வருபவர் அந்தரா பானர்ஜி(31). மும்பை அருகில் உள்ள தானேயில் வசிக்கும் அந்தரா பானர்ஜி, பாந்த்ரா-கங்காநகர் ஆரவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பிற்காக சூரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு பயணி முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. இருக்கையில் அமர்ந்திருந்த பானர்ஜியை அதிலிருந்து காலி செய்யும்படி சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மறுத்ததை அடுத்து, பயணி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகரை அழைத்தார். அவர்கள் வந்து பானர்ஜியை அங்கிருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

அதோடு பானர்ஜியிடம் இருந்த டிக்கெட்டை சோதித்து பார்த்தபோது அது சிலீப்பர் பெட்டியில் பயணம் செய்வதற்கு எடுக்கப்பட்ட டிக்கெட் என்று தெரிய வந்தது. அப்படி இருந்தும் பானர்ஜி ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தனது ஆடைகளை தானே அவிழ்த்து, டிக்கெட் பரிசோதகரையும், ஆர்பிஎப் பணியாளர்களையும் ரேசர் பிளேடால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் உறவினர்கள் அல்லது சட்ட ஆலோசகரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பரிந்துரைத்தபோது, ​​அவர் ஒத்துழைக்க மறுத்து, கைது செய்ய வலியுறுத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த வாக்குவாதத்தால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் அமைதியடைந்தார் . இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை மூத்த இன்ஸ்பெக்டர் பந்த்ரிநாத் காண்டே கூறுகையில், பானர்ஜி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல், பொது ஊழியர்களுக்கு கடுமையான தீங்கு விளைவித்தல், தாக்குதல் மற்றும் வேண்டுமென்றே அவமதித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்''என்றார்

ஆடையை அவிழ்த்து ரகளை

ஏசி கோச்சின் டிக்கெட் கிடைக்காததால் சிலீப்பர் கிளாஸ் டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். இரவு 9.30 மணி முதல் 10.50 மணி வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பானர்ஜி மீது புகார் செய்த ரயில்வே போலீஸ் அதிகாரி, யாமினி காந்த் மிஸ்ரா கொடுத்துள்ள புகாரின் படி , முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை காலி செய்ய பானர்ஜி மறுத்ததைப் பற்றி டிசி ஹரிகேஷ் திரிபாதி மற்றும் சக பயணி ஆகியோர் கான்ஸ்டபிள் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்தனர். பானர்ஜியை அமைதிப்படுத்த முயற்சித்தேன்.

ஆனால் பானர்ஜி தனது ஆடைகளை அவிழ்த்து ஆக்ரோஷமாக மாறினார், ரேசர் பிளேடால் மிஸ்ரா, டிசி மற்றும் தனக்கு காயங்களை ஏற்படுத்தினார். கைகலப்பின் போது எனது சீருடை, கைபேசி மற்றும் கண்ணாடி சேதமடைந்தது என்று மிஸ்ரா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியின் கதவுகளைப் பூட்டினர். தப்பிப்பதற்காக பானர்ஜி கண்ணாடியை உடைத்தார் , ரயில் தஹானுவை அடைந்ததும் அவர் ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

'தோட்டா இல்லை' - விமான நிலையத்தில் டிரிக்கரை அழுத்திய சிவசேனா மாஜி கவுன்சிலர் - இருவர் காயம்

மும்பையில் சிவசேனா கவுன்சிலராக இருந்தவர் கமலேஷ் ராய். இப்போது கம்லேஷ் ராய் மகன் கவுன்சிலராக இருக்கிறார். கமலேஷ் ராய் லக்னோவிற்கு சென்றுவிட்டு மும்பை திரும்புவதற்காக லக்னோ விமான நிலையம் வந்தார். அவர் த... மேலும் பார்க்க

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க