செய்திகள் :

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

post image

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் ரோந்து பணியின்போது, மறைந்திருந்த 4 தமிழர்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சாமராஜநகர் பகுதி மக்கள்
சாமராஜநகர் பகுதி மக்கள்

இதில், மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

மு.க. ஸ்டாலின் - திமுக
மு.க. ஸ்டாலின் - திமுக

அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.

மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க

திருநெல்வேலியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு! | Photo Album

திருநெல்வேலியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு.!விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை மேலும் பார்க்க

திருப்பூர்: 80 வது சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்! | Photo Album

திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்திருப்பூரில் சுதந்திரதின விழா கொண்டா... மேலும் பார்க்க

ஈரோடு: மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட 80 வது சுதந்திர தின விழா! | Photos

ஈரோடு சுதந்திர தின விழா கொண்டாட்டம்ஈரோடு சுதந்திர தின விழா கொண்டாட்டம்ஈரோடு சுதந்திர தின விழா கொண்டாட்டம்ஈரோடு சுதந்திர தின விழா கொண்டாட்டம்ஈரோடு சுதந்திர தின விழா கொண்டாட்டம்ஈரோடு சுதந்திர தின விழா க... மேலும் பார்க்க