செய்திகள் :

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

post image

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகு​தி​யில் கர்நாடக வனத்​துறை​யினர் ரோந்து பணி​யின்​போது, மறைந்​திருந்த 4 தமிழர்கள் மீது நாட்டு துப்​பாக்​கி​யால் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்படுகிறது. இதில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் ஹனூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎம் சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், ``கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

``பாஜக-வின் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாத நயினார் நாகேந்திரன்" - சாடும் மாணிக்கம் தாகூர்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மைசூரு மாவட்டம், கபினி அணையில் இர... மேலும் பார்க்க

``ஆர்.எஸ்.பாரதிக்கு இது அழகல்ல..." - கடிந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன்

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மாநிலத... மேலும் பார்க்க

``மோடியின் பேச்சுக்கும், கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி" - எம்.பி-மாணிக்கம் தாகூர்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய நாட்டின் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் உரைய... மேலும் பார்க்க

``நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து அருவருக்கத்தக்கது" - பாஜக நிர்வாகி குஷ்பு

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க