செய்திகள் :

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

post image

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டிற்கு அடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் பானர்ஜி இறந்து கிடந்தார். ஜன்னல் வழியாக அவர் இறந்து கிடந்ததை உள்ளூர் மக்கள் பார்த்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், திரளான மக்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

அவரது இறப்பு குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்து இருக்கிறது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மம்தா பானர்ஜி முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆசிஷ் பானர்ஜி கல்வி மற்றும் விவசாய அமைச்சராக பணியாற்றினார். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டதில் இருந்து மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவர் நேற்று இரவில் கூட கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அவர் தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய பானர்ஜி 2001ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்ட... மேலும் பார்க்க

` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள ... மேலும் பார்க்க

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க