செய்திகள் :

TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

post image

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், ஆட்டம் முடிவில் அந்த முடிவே அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு தொடக்கத்தில் ராதாகிருஷ்ணனும் சுரேஷ் லோகேஷ்வரும் அதிரடி ஓபனிங் கொடுத்தனர். ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.

ஆனால், அடுத்த பந்தில் மீண்டும் பெரிய ஷாட் அடிக்க முயன்றபோது மிட்-ஆஃபில் பவன் சூரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு லோகேஷ்வரும் விரைவிலேயே ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து‌ கொண்டிருக்க, மறுபுறம் சச்சின் ரன்களை சேர்த்துக்கொண்டே சென்றார்.

கடைசி கட்டத்தில் மாதவ பிரசாத்துடன் இணைந்து சச்சின் அதிரடி காட்டினார். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ஈஸ்வரனின் பந்தில் நேராக சிக்ஸர் அடித்த சச்சின், அடுத்த பந்திலேயே ஸ்கொயர் கட் மூலம் பவுண்டரி விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. சச்சின் 77 ரன்கள் விளாசி கோவை அணியின் இன்னிங்ஸுக்கு முதுகெலும்பாக இருந்தார்.

202 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கே. ராஜ்குமார் மட்டும் 32 ரன்கள் எடுத்து போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் கோவை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.

கோவை அணியின் பந்துவீச்சில் ஜதவேத் எஸ். மற்றும் தீபன் லிங்கேஷ் ஆகியோர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக ஜதவேத் 3.1 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து திருச்சி அணியின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார்.

இறுதியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.இந்த ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த பி. சச்சின், ஆட்டநாயகன் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

TNPL 2026: ராணிப்பேட்டையிலிருந்து TNPL வரை; அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசிய ஹரி ராகவேந்திரா!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.திண்டுக்கல் நத்தம... மேலும் பார்க்க

TNPL 2026 : ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும்.!

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,சேப்பாக் சூப்பர் கில... மேலும் பார்க்க

TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! நடந்தது என்ன?

TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க

TNPL: ஒருபக்கம் லாஸ்ட் ஓவர் திக் திக்; மறுபக்கம் `196' மிரட்டல்! - திருச்சி, நெல்லையின் தரமான வெற்றி

“இன்னும் மேட்ச் முடியலப்பா!” — ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்களை இப்படித்தான் சொல்ல வைத்தது.. ஒருபுறம் கடைசி ஓவர் வரை திக்... திக்... என நகர்ந்த நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் ம... மேலும் பார்க்க

TNPL 2026 : சொல்லி அடித்த சேப்பாக் கில்லீஸ் ; முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட மதுரை பாந்தர்ஸ்!

TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்க... மேலும் பார்க்க

TNPL 2026: திருச்சியின் பந்துவீச்சில் சரிந்த நெல்லை... திருப்பூரின் துரத்தலில் தடுமாறிய கோவை!

TNPL 2026 தொடரின் 12-வது மற்றும் 13-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில் நெல்லை ராயல் கிங்ஸை திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்திலும், கோவை கிங்ஸை திருப்... மேலும் பார்க்க