செய்திகள் :

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

post image

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அப்பகுதி த.வெ.க நிர்வாகியாகவும் உள்ளார். இவர்  தனது சமூக வலைதள பக்கங்களில் இந்து கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தும் வகையில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் மற்றும் புகைப்படத்துடன் பதிவிட்டதுடன், இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.

இவர் மீது ஏற்கெனவே திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். அவரது கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், மதங்களுக்கிடையே பகைமையைத் தூண்டி சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவரது எக்ஸ் கணக்கு மற்றும் செல்போன் எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து மைக்கேலை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க