செய்திகள் :

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

post image

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு சென்ற வில்லியனூரைச் சேர்ந்த ரௌடி வினோத், இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள மற்ற கடைகள் அனைத்திலும் மாமூல் வசூலித்து தன்னிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி, இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் ரௌடி வினோத்.

சேதமடைந்தப் பொருட்கள்

அதன்படி மீண்டும் இரவு 8.30 மணிக்குச் சென்ற ரௌடி வினோத், பாபுவிடம் மாமூல் கேட்டிருக்கிறார். ஆனால் பாபுவும், ராஜேந்திரனும் அதற்கு மறுத்ததுடன், போலீஸாரிடம் புகாரளிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். அதற்கு, `போலீஸ்னா பயந்துடுவேனா… அவங்களே எனக்கு பயப்படுவாங்க.

எம்.எல்.ஏ, முதலமைச்சர்னு நீ யாருகிட்ட வேணும்னாலும் போ. எனக்கு எந்த பயமும் இல்ல. எனக்கு மாமூல் வசூலிச்சிக் குடுக்காம நீ எப்படி தொழில் செய்வாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாகச் சென்றிருக்கிறார் வினோத். சிறிது நேரத்தில் திரும்பி வந்து ஒரு பையில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்திருக்கிறார்.

அதைப் பார்த்து அதிர்ந்து போன ராஜேந்திரனும், பாபுவும் `நாங்க பணம் கொடுக்கிறோம். அதை கடைக்குள் போடாதே…' என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ரௌடி வினோத், அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசியிருக்கிறார்.

அது வெடித்துச் சிதறிய சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அதேசமயம் கடைக்குள் இருந்த ராஜேந்திரன், பாபு மற்றும் அவரது மனைவி மூவரும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். கடைக்குள் இருந்த அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்துக் கடைக்காரர்கள், அந்தத் தீயை அணைத்தனர்.

ரௌடி வினோத்

தகவலறிந்து அங்கு சென்ற வில்லியனூர் காவல் நிலைய போலீஸார், பாபு மற்றும் ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அவர்கள், தப்பிச் சென்ற ரௌடி வினோத்துக்கு வலை வீசினர்.

அப்போது புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்த வினோத்தை ஒரு மணி நேரத்துக்குள் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அப்போது வினோத்துக்கு கைமுறிவு ஏற்பட்டதால், அவருக்கு மாவுக்கட்டுப் போடப்பட்டது. ரௌடி வினோத் மீது கஞ்சா விற்பனை, அடிதடி என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffin... மேலும் பார்க்க

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி,... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது. முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க