செய்திகள் :

``அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது..!" - மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களை சாடிய ஆர்.எஸ் பாரதி

post image

சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டத்தில் திமுக ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், "சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்ரமணியன் மாதிரி யாரும் செய்ததே கிடையாது.

சென்னை சைதாப்பேட்டைக்கு மிகப்பெரிய மருத்துவமனையை மா.சுப்ரமணியன் கொண்டு வந்தார்.

கலைஞர் முதல்வராக இருந்தப்போதுகூட அந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை.

முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன்
முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன்

அவர் கட்டிக்கொடுத்த அந்த மருத்துவமனைக்கு சென்ற நோயாளியின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே மா.சுப்ரமணியன் வெற்றி பெற்று இருப்பார்.

அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது. உயிர் காப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம். இந்த மேடையில்கூட மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்பதை அவர் (மா.சுப்ரமணியன்) சொன்னார்.

இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள். 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' - வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய தலைவலி - 'வரி'. அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி, அதிக வரிகள் வசூலிக்கின்றன. அதனால், அந்த நாடுகள் மீது அதிக வரிகள... மேலும் பார்க்க

`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப்பாடி பழனிசாமி சாடல்

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' - பின்னணி என்ன?

தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசற் கதவின் மேல் கடந்த சில நாள்களாக ஒரு சிவப்புத்துணி தொங்கிக் கொண்டிருக்கிறது. எதற்காக அந்த துணி வாயிற் கதவில் மாட்டப்பட்டிருக்கிறது என அம... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; ``சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா?" - எடப்பாடி கமென்ட்!

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாடு என்பது பொதுவானது. முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பெற்றவர். சமீபத்தில் கூட ... மேலும் பார்க்க

Eye Scan: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையாக நாகாலாந்து அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்னை

வடகிழக்கு இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாகாலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலங் புகழ்பெற்றவர... மேலும் பார்க்க