"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சா...
அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த விவகாரம் வனத்துறையின் கவனத்திற்குச் சென்ற நிலையில், விக்ரம் மட்டுமன்றி மனித குரங்கை வாங்கியவர்கள், விற்பனை செய்தவர்கள், இடைத்தரகர்களாக இருந்தவர்கள் எனப் பலரிடம் வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரிலிருந்து 3 லார் கிப்பன் குரங்குகளை ஈரோட்டுக்குக் கொண்டுவந்து பண்ணையில் வைத்திருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரது பண்ணையிலும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இவரது பண்ணையில் இருந்துதான் அந்த கிப்பன் குரங்கு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "மத்திய அரசின் 'பரிவேஷ்' இணையதளப் பதிவின்படி மணிப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் இந்த குரங்குகளை வளர்க்கப் பதிவு செய்திருந்தார். அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் தத்தெடுப்பு முறையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கே. கேசவநாதன் என்பவரது பண்ணைக்கு 3 லார் கிப்பன் குரங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவருக்குச் சொந்தமான விலங்குகள் வளர்ப்புப் பண்ணையில் ஈரோடு மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஒரு மனித குரங்கு இறந்திருக்கிறது.

அது குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். மேலும், மனித குரங்கை வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்களை சரியான முறையில் பராமரிக்காமல் கால தாமதமாக விண்ணப்பித்திருக்கிறார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனக்குற்ற சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பு உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.



















