செய்திகள் :

தக்கலை: அரசுப் பள்ளியில் மது அருந்திய மாணவிகள்; மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை!

post image

கன்னியாகுமரி மாவட்டம், மேட்டுக்கடை பகுதியில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் மது பாட்டில் கொண்டுவந்து, பள்ளி வகுப்பறை வராண்டாவில் வைத்து மதுவை அருந்தியுள்ளனர். மாணவிகள் மது குடிப்பதை உடன் இருந்த மற்றொரு மாணவி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த நிகழ்வின் வீடியோ, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் தக்கலை அரசுப் பள்ளியில் இன்று விசாரணை நடத்தினார். பெண் காவலர்கள் உதவியுடன் மது அருந்திய மாணவிகளிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு வெளியில் இருந்து இளைஞர் ஒருவர் மது வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகள் மது குடிக்கும் வீடியோ

இதற்கிடையே தக்கலை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகள் இருவரும் சீருடையில் மது அருந்திய காட்சிகளை சக பள்ளி மாணவர்களே செல்போனில் வீடியோ பதிவு செய்து, கடந்த ஜூலை மாதமே பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினிடம் காட்டியுள்ளனர். இரண்டு மாணவிகளையும் அழைத்து விசாரித்த தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக மது அருந்தும் காட்சிகள் தங்களது வீட்டில் வைத்து அரங்கேறியதாக மாணவிகளிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பிவைத்துள்ளார். இப்போது மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதும், ஏற்கெனவே மாணவிகள் எழுதிக்கொடுத்த கடிதத்தை காண்பித்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

தக்கலை அரசுப் பள்ளியில் போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் விசாரணை மேற்கொண்டார்

அதே சமயம் தக்கலை அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமையிலான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் மாணவிகள் மது அருந்தியது பள்ளி வகுப்பறையின் வராண்டா பகுதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை வடசேரி அரசுப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தலைமை ஆசிரியை மீது மேல் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், மாணவர்கள் நலன் கருதி அந்தப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு கனவு; ஓயாமல் கேட்கும் கைத்தறி சத்தம்! - இரு மகன்களையும் மருத்துவராக்கிய சேலம் நெசவாளர் தம்பதி

அந்தச் சிறிய வீட்டில் பகல் முழுதும் ஓயாமல் கேட்கிறது கைத்தறியின் சத்தம்.அந்த நூல்களுக்கு நடுவேதான் ஒரு தந்தையின் வியர்வையும், ஒரு தாயின் கனவும் நெய்யப்பட்டு கொண்டிருந்தன. தான் பெற வேண்டும் என்று நினைத... மேலும் பார்க்க

17 வயதில் ரூ.3.55 கோடி உதவித்தொகை! Brown பல்கலையில் சேரும் ஈரோடு மாணவர் பிரணவ்

தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.CS Academy,... மேலும் பார்க்க

பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விஐடி சென்னை!

பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிம... மேலும் பார்க்க

அப்பாவின் நம்பிக்கை... மகளின் உழைப்பு... NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!

NEET... இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாம... மேலும் பார்க்க

சேலம்: ISO தரச்சான்று பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி! - சாதித்தது எப்படி?

தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவு எனச்சொல்லி மூடப்பட்டு வருகின்றன. பொதுப் பள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்ச... மேலும் பார்க்க