செய்திகள் :

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

post image

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.

அப்போதிருந்து சூர்ய காந்த் மீது இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி உள்ளது. இந்த அதிருப்தியின் உச்சம் தற்போது ஐதராபாத்தில் நேரடியாக சூர்ய காந்தை தாக்கியது.

NALSAR பல்கலைக்கழகம்
NALSAR பல்கலைக்கழகம்

என்ன பிரச்னை?

ஐதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NALSAR University of Law) பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. இதில் 450 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு சூர்ய காந்தை சிறப்பு விருந்தினராக அழைக்க பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஆனால், இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பார் கவுன்சில் உத்தரவு

இந்தப் பிரச்னை வெளிச்சத்திற்கு வர, இந்திய பார் கவுன்சில், "மறு உத்தரவு வரும் வரை 2026-ஆம் ஆண்டு நால்சார் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் எவரையும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய வேண்டாம்" என்று ஐதராபாத் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

மேலும், பட்டமளிப்பு பிரச்னைக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது இந்திய பார் கவுன்சில்.

பார் கவுன்சில்
பார் கவுன்சில்

சூர்ய காந்த் பேச்சு

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது NALSAR பல்கலைக்கழகம். இந்த வழக்கை விசாரித்தது சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள்.

இந்த வழக்கு விசாரணையில் சூர்ய காந்த், "இதற்கும் பார் கவுன்சிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். மாணவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கும் எனக்குமான ஒரு உரையாடல்.

இதில் சம்பந்தமே இல்லாமல் சுற்றறிக்கை வெளியிட இவர்கள் யார்?

நான் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறேன். சில நேரங்களில் மாணவர்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும், அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டுத் தங்கள் குரலை உயர்த்தும்போது அதை அனுமதிக்கத்தான் வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.... மேலும் பார்க்க

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.Mayor Pr... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒர... மேலும் பார்க்க

`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட... மேலும் பார்க்க

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம்மதுஒழிப்புக்கு எதிராக ஒரு மு... மேலும் பார்க்க