செய்திகள் :

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

post image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ரச்னாத்மக் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்கிறார். அந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, "மத்திய அரசுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

 மோடி - மெலோனி
மோடி - மெலோனி

தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கை என்று மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார். இதை நேரடியாகச் செய்து காட்டுவதற்காக, மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்திருக்கிறார்.

அப்போது சந்தீப் தீட்சித், "இத்தாலி பிரதமர் மெலோனி என்று நினைத்து என்னைக் கட்டிப்பிடிக்கவில்லையே?" என ஜோக்காகக் கேட்க, அதற்கு ராகுல் காந்தி, "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த உரையாடல் பாஜக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் சந்தீப் தீட்சித் பேச்சுக்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த வகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, "ராகுல் காந்தியின் பேச்சும் நடத்தைகளும் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகின்றன. நாட்டின் பிரதமர் மற்றும் இத்தாலி நாட்டின் தலைவர் குறித்துப் பயன்படுத்திய தரமற்ற சொற்கள் நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல" எனக் கண்டித்திருக்கிறார்.

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.Mayor Pr... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒர... மேலும் பார்க்க

`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட... மேலும் பார்க்க

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம்மதுஒழிப்புக்கு எதிராக ஒரு மு... மேலும் பார்க்க

"பிரிவினையின் போது மோடி போன்ற பிரதமர் இருந்திருந்தால்..!"- காங்கிரஸை விமர்சிக்கும் யோகி ஆதித்யநாத்

1947 பிரிவினையின்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், "இந்தியாவிற்கு யாராலும் எந்தத் தீங்கும் செய்திருக்க முடியாது" என்றும், இது போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாடு தனது வரலாற்றின் "... மேலும் பார்க்க