செய்திகள் :

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

post image

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து அண்ணாமலை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை
குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை

குறிப்பாக, பாஜகவில் இருந்து அண்ணாமலை வெளியேறியபோது அவருடன் இணைந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கு புதிய அமைப்பில் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கரு நாகராஜன், பாலாஜி உத்தமராமசாமி, வசந்தராஜன், சுமதி வெங்கடேசன், பழநி கனகராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் முக்கியமாகப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் சிலருக்கு மாநில அளவிலான பொறுப்புகளும், மற்றவர்களுக்கு மாவட்டம் சார்ந்த பொறுப்புகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை ஆலோசனை

புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக அண்ணாமலை நேரடியாக ஆலோசித்து வருவதாகவும், அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே We The Leaders அமைப்பில் இணைந்துள்ளவர்களை ஒருங்கிணைத்து, அவர்களை களப்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமைப்பின் செயல்பாடுகளை சென்னையை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தவும், மாவட்ட அளவில் வலுவான கட்டமைப்பை உருவாக்கவும் அண்ணாமலை தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அண்ணாமலை

விரைவில் அறிவிப்பு

பொறுப்புகளுக்கான பெயர்கள் குறித்த ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவில் இருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்குவதன் மூலம், அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் ஏற்கெனவே தன்னுடன் இருந்த நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

இதனால், We The Leaders அமைப்பின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பதற்கு இந்த நிர்வாக நியமனங்கள் முக்கியமானதாக அமையக்கூடும்.

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.Mayor Pr... மேலும் பார்க்க

`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட... மேலும் பார்க்க

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம்மதுஒழிப்புக்கு எதிராக ஒரு மு... மேலும் பார்க்க

"பிரிவினையின் போது மோடி போன்ற பிரதமர் இருந்திருந்தால்..!"- காங்கிரஸை விமர்சிக்கும் யோகி ஆதித்யநாத்

1947 பிரிவினையின்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், "இந்தியாவிற்கு யாராலும் எந்தத் தீங்கும் செய்திருக்க முடியாது" என்றும், இது போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாடு தனது வரலாற்றின் "... மேலும் பார்க்க

'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' - வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய தலைவலி - 'வரி'. அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி, அதிக வரிகள் வசூலிக்கின்றன. அதனால், அந்த நாடுகள் மீது அதிக வரிகள... மேலும் பார்க்க