செய்திகள் :

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

post image

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், ''செத்த மாட்டு தோலினால் செருப்பு செய்யலாமே, செத்த ஆட்டு தோலினால் ஆடை செய்யலாமே, செத்த மனிதனின் தோலால் என்ன செய்ய முடியும்?

அப்பேற்பட்ட மனிதர்கள் இருக்கக்கூடிய ஆட்சி செய்யக்கூடிய உலகமாக மாறிவிட்டது. சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?'' எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கும் அமைச்சர் வன்னியரசு, ''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய் - அமைச்சர் வன்னியரசு
முதல்வர் விஜய் - அமைச்சர் வன்னியரசு

பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?'' எனக் கூறியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து கூறியிருக்கும் அண்ணாமலை, ''தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' எனக் கூறியிருக்கிறார்.

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக... மேலும் பார்க்க

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

துரைமுருகன் மாற்றா ?இளைஞர்களுக்கு வாய்ப்பு… 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிய... மேலும் பார்க்க

"பயமா? பதற்றமா?" - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற தவெக அரசு - அதிமுக கேள்வி

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13), தவெக அரசு 'என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டைச் சேர்ந்த 11 வகையான மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடைக்கு அந்த மது... மேலும் பார்க்க

'800க்கு 538 மதிப்பெண்' - 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்க... மேலும் பார்க்க