செய்திகள் :

பள்ளி மாணவர் கொலை: "அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு" - உதயநிதி கண்டனம்

post image

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் போதை கும்பலைத் தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.

போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.

நிர்வாகத்திறனற்ற இந்தக் கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.

குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.

இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?

இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

'800க்கு 538 மதிப்பெண்' - 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்க... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர், சௌமியா அன்புமணியின் தந்தை! - ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி யார்?

தமிழின வளர்ச்சி, தமிழ்நாடு மேம்பாடு, பொதுவாழ்வு சாதனை ஆகியவற்றில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த விருத... மேலும் பார்க்க

80வது சுதந்திர தினம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிட்ட விஜய் | Live Updates

அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்கோட்டை கொத்தாளத்திற்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய். இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் வ... மேலும் பார்க்க

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" - மாணிக்கம் தாகூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய தலைமுறை அரசியல்' என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்... மேலும் பார்க்க