செய்திகள் :

TNPL 2026 : ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும்.!

post image

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியையும் வீழ்த்தியது.

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கும் சேலம் ஸ்பார்டன்ஸ்குமான 18-வது லீக் போட்டி மழையின் காரணமாக தலா 15 ஓவர்கள் மட்டுமே என்ற முடிவில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதுவே திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு சாதகமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சிவம் சிங் மற்றும் வி.கே.வினீத் இருவரின் பார்ட்னர்ஷிப் சிறப்பான ரன்களை கொடுத்தது.

TNPL 2026

திண்டுக்கல் அணியின் கேப்டன் இந்திரஜித் தனது Blast-ஆன பேட்டிங்கின் மூலம் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள்,8 சிக்சர்களை விளாசி 73 ரன்களை குவித்தார். இது ஆட்டத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. இதனால் சேலம் அணி நெருக்கடிக்குள்ளானது. இவருடன் இணைந்த விமல் குமார் 35 ரன்களை அடிக்க இருவரின் பார்ட்னர்ஷிப் வெறும் 24 பந்துகளில் 62 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்து இலக்கு வைத்தது.

பரபரப்பாக ஆரம்பித்த இரண்டாவது இன்னிங்ஸில்

கேப்டன் எஸ்.அபிஷேக் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்திருந்தார். பேஸ்மண்ட் வீக்காகி அடுத்தடுத்து வீக்கெட்டுகள் சரிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 15 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஹரிஹரனின் அதிரடியான சதம், மதுரை பாந்தர்ஸின் முதல் தோல்வி !

19-வது லீக் போட்டி மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பார்ட்னர்ஷிப் புல்லட் ரயில் போல வேகத்தில் சென்று 169 ரன்களை சேர்த்தது.

ஹரிஹரன் மற்றும் கேப்டன் என்.ஜெகதீசன் பந்தை சிக்சர், பவுண்டரிகள் என பிரிச்சு மோய்ந்தனர். 50 பந்துகளுக்கு 108 ரன்களை விளாசி ஆவி பறக்க சென்சுரி விருந்து வைத்தார். மதுரை பாந்தர்ஸ்-க்கு மறுபக்கம் என்.ஜெகதீசன் 48 பந்துகளுக்கு 79 ரன்களை குவித்திருந்தார். இருவரின் விக்கெட்டுக்கு பிறகு வந்த ஸ்வப்னில் சிங்-ம் தனது பங்கிற்கு 42 ரன்களை அள்ளி தந்தார். 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மதுரை பாந்தர்ஸ்-க்கு இலக்காக வைத்தது.

TNPL 2026

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் ஏனோ மதுரை பாந்தர்ஸ்க்கு சரியாக கைகூடவில்லை.

ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட் இழக்க கேப்டன் சித்தா ராம் ஒரு ரன்களை கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார். டீமை காப்பாற்றி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஹரி ராகவேந்திரா மட்டும் போராடி 57 பந்துகளுக்கு 98 ரன்களை சேர்த்து பின் அவரும் அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201

ரன்களை மட்டுமே சேர்த்து மதுரை பாந்தர்ஸ் தனது முதல் தோல்வியை கண்டது‌. சிறப்பாக ஆடி சதம் விளாசிய ஹரிஹரன் 'மேன் ஆஃப் தி மேட்ச்' பெற்றார்.

TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! நடந்தது என்ன?

TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க

TNPL: ஒருபக்கம் லாஸ்ட் ஓவர் திக் திக்; மறுபக்கம் `196' மிரட்டல்! - திருச்சி, நெல்லையின் தரமான வெற்றி

“இன்னும் மேட்ச் முடியலப்பா!” — ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்களை இப்படித்தான் சொல்ல வைத்தது.. ஒருபுறம் கடைசி ஓவர் வரை திக்... திக்... என நகர்ந்த நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் ம... மேலும் பார்க்க

TNPL 2026 : சொல்லி அடித்த சேப்பாக் கில்லீஸ் ; முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட மதுரை பாந்தர்ஸ்!

TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்க... மேலும் பார்க்க

TNPL 2026: திருச்சியின் பந்துவீச்சில் சரிந்த நெல்லை... திருப்பூரின் துரத்தலில் தடுமாறிய கோவை!

TNPL 2026 தொடரின் 12-வது மற்றும் 13-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில் நெல்லை ராயல் கிங்ஸை திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்திலும், கோவை கிங்ஸை திருப்... மேலும் பார்க்க

TNPL 2026 : சொதப்பிய சேலம் ஸ்பார்டன்ஸ்‌ - பவுலிங்கில் ஆதிக்கத்தை இறக்கியது மதுரை பாந்தர்ஸ்!

சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய ... மேலும் பார்க்க

`பூரணை நீங்க எடுத்துக்குங்க; ஹர்திக்க குடுங்க' - LSG யின் டிரேட் டீல்-க்கு ‘ஓகே’ சொல்லுமா மும்பை?

ஐபிஎல் 2027 போட்டிகளுக்கு இன்னும் காலம் இருக்கிறது... ஆனால் அடுத்த சீசனுக்கான டிரேட் பேச்சுகள் எப்போதோ சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யாவின் டிரேட் பற்றி ... மேலும் பார்க்க