செய்திகள் :

'தளபதி விஜய் சாலை' - முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பெயர் சூட்டும் பரந்தூர் - ஏகனாபுரம் மக்கள்!

post image

சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் - ஏகனாபுரத்தைச் சேர்ந்த மக்கள் 'விமான நிலையத்தை வரவிடாமல் தடுத்த முதல்வர் விஜய்க்கு நன்றி' எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகனாபுரத்தின் பிரதான சாலைக்கு தளபதி விஜய் சாலை என பெயரிடவும் கோரியிருக்கின்றனர்.

ஏகனாபுரம்
ஏகனாபுரம்

ஏகனாபுரம் மக்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், ''ஏகனாபுரம் கிராமத்தின் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பாரம்பர்யமான குடியிருப்புகளைப் பாதுகாக்க 1100 நாட்களாகப் போராடி வந்த ஏகனாபுரம் கிராம விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக ஏற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அமைச்சர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தக் கிராம சபை நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நமது ஏகனாபுரம் கிராமத்தைப் பாதுகாத்து கொடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏகனாபுரம் பிரதான சாலைக்கு தளபதி விஜய் சாலை எனப் பெயரிட இந்தக் கிராம சபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது'' எனக் கூறப்பட்டிருக்கிறது.

தீர்மானம்
தீர்மானம்

முதல்வராகும் முன்பு பரந்தூருக்கு நேரில் சென்று பரந்தூர் மண்ணில் விமான நிலையம் வரவிடமாட்டேன் விஜய் உறுதியளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

"திமுக - அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிமொழி பளீச்

அதிமுக - திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாள... மேலும் பார்க்க

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' - முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.CM Vij... மேலும் பார்க்க

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது. அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட... மேலும் பார்க்க

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" - ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க