செய்திகள் :

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

post image

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருக்கிறது.

அதுபோன்ற மனிதநேயமிக்க சமூகப் பணியாளர்தான் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பா.மணிமாறன் (வயது 40).

கடந்த 25 ஆண்டுகளாக, தொழுநோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரை மீட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார் மணிமாறன்.

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடக்கும் முதியவர்களின் உடல்களையும் மீட்டு நல்லடக்கம் செய்கிறார்.

மணிமாறனுக்கு விருது வழங்கிய முதலமைச்சர் விஜய்
மணிமாறனுக்கு விருது வழங்கிய முதலமைச்சர் விஜய்

திருவண்ணாமலை மட்டுமில்லாமல், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி எனப் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து அரசு மருத்துவமனைகளில் உறவினர்களால் உரிமைக் கோரப்படாத பிணங்களையும் கேட்டு பெற்று காவல்துறையினரின் அனுமதியுடன் முறைப்படி அடக்கம் செய்கிறார். இப்போது வரை சுமார் 3,508 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார் மணிமாறன்.

இவரின் இத்தனை ஆண்டுகளாகச் சேவையைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், முதலமைச்சர் விஜய் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை மணிமாறனுக்கு வழங்கினார். மேலும், 10 கிராம் எடையிலான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் விஜய்.

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது. அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" - ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக... மேலும் பார்க்க

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

துரைமுருகன் மாற்றா ?இளைஞர்களுக்கு வாய்ப்பு… 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிய... மேலும் பார்க்க