செய்திகள் :

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" - ராஜ்மோகன் கண்டனம்

post image

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதற்கு பதிலளித்த அவர், "தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாகப் பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது.

விரைவில் திமுக - பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும். திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாகப் பேசி வருகின்றனர். சத்தமின்றி சாதனைகளை நிகழ்த்தும் முதலமைச்சர் விஜய்.

மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

ராஜ்மோகன் - தவெக
ராஜ்மோகன் - தவெக

இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது எனப் பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது. அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட... மேலும் பார்க்க

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக... மேலும் பார்க்க

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

துரைமுருகன் மாற்றா ?இளைஞர்களுக்கு வாய்ப்பு… 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிய... மேலும் பார்க்க