செய்திகள் :

``மோடியின் பேச்சுக்கும், கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி" - எம்.பி-மாணிக்கம் தாகூர்

post image

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய நாட்டின் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி! மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.

எம்.பி-மாணிக்கம் தாகூர்
எம்.பி-மாணிக்கம் தாகூர்

5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ₹63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ₹29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன; இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஆர்.எஸ்.பாரதிக்கு இது அழகல்ல..." - கடிந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன்

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மாநிலத... மேலும் பார்க்க

``நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து அருவருக்கத்தக்கது" - பாஜக நிர்வாகி குஷ்பு

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே..!" - அமைச்சர் ரமேஷ்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

நயினார் சர்ச்சை பேச்சு: ``வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

"தமிழ்நாடு முழுக்கவே வம்பு இழுத்து வைத்திருக்கிறேன்!"- சொல்கிறார் அமைச்சர் பிரபு

பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து த.வெ.க-வுக்குள் அடியெடுத்துவைத்த டாக்டர் து.க.பிரபு, காரைக்குடி தொகுதியில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்று, அமைச்சராகவும் பொ... மேலும் பார்க்க

'தாய் மீதும், தாய் நாட்டின் மீதும்...' - முதல்வர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நயினார் விளக்கம்