செய்திகள் :

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

post image

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவது வழக்கம். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர். இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் மீது ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினர் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகேயன்

கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ராமநாதபுரம் நகராட்சியில் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரின் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கு தகவல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந் நிலையில், கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக  நகராட்சி பொறுப்பு ஆணையர்  சுகுமாறன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் நகராட்சியில் நடந்துள்ள இந்த கூத்து தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்ட... மேலும் பார்க்க