செய்திகள் :

``100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" - முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!

post image

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 100-வது நாளில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு, முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், "தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" என்று குறிப்பிட்ட அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அரசு நிறைவேற்றிய முக்கியத் திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' அமைக்கப்பட்டதுடன், அம்மாக்கள் மற்றும் கை குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' வாயிலாக ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவ 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டது உட்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது

'அம்மா யார் என்று தெரியாதவர்களே வந்தே மாதரத்தை எதிர்க்கிறார்கள்' - கேரள துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை குன்னத்துக்கால் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் 'சங்கல்பம் -2026 யுவசங்கமம்' என்ற இளைஞர் மாநாடு சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்றது. இந்த மாநா... மேலும் பார்க்க

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க