செய்திகள் :

கோவை: கழுதைகளுக்கு நடந்த திருமணம் – மழை வேண்டி நூதன வழிபாடு!

post image

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி மழை வேண்டி கழுதைகளுக்கு விமர்சமையாக திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர்.

லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் 'பஞ்ச கல்யாணி' முறைப்படி இத்திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தைப் போலவே பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி மணிகள் அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி புதுப்பெண் போல அலங்கரித்தனர். அதேபோல் ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது.

கழுதைகளுக்கு திருமணம்
கழுதைகளுக்கு திருமணம்

தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலம் மற்றும் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளம் முழங்க பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டு திருமணம் முறைப்படி அரங்கேறியது. திருமணத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மொய்ப்பணம் வழங்கி கழுதைகளை ஆசீர்வதித்தனர். தொடர்ந்து மறுவீடு அழைப்பு நிகழ்வு நடத்தப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியபோது, கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால் நல்ல மழை பெய்ததாகவும், அதேபோல தற்போதும் ஊரில் நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் அக்கிராம மக்கள் கூறினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி!

சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாக... மேலும் பார்க்க

சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!

சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.!

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.! மேலும் பார்க்க

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் ஆடி அமாவாசை; பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு | Photo Album

பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில... மேலும் பார்க்க

வேண்டுதலுக்காகக் கட்டிய மணிகளை விழுங்கும் அதிசய மரம்... கலியுக அற்புதம் சொரிமுத்து ஐயனார் கோயில்!

பிரார்த்தனை நிறைவேறினால் கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல தலங்களில் உள்ளது. அப்படிக் கட்டப்பட்ட மணிகளை ஒரு மரம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விழுங்கிவிடுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், திருநட்டாலம் சங்கரநாராயணர் : வழக்குகளில் வெற்றி... திருமண வரம் தரும் ஆலயம்!

ஈசன் சங்கரநாராயணராய் அருளும் தலங்கள் அனைத்துமே சிறப்புடையவை. தம்பதி ஒற்றுமையை அதிகப்படுத்துபவை. இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான நலன்களை அருள்வதோடு உலகுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்குவன. அப்படிப்பட்... மேலும் பார்க்க