செய்திகள் :

``தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" - அப்பாவு காட்டம்

post image

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த அரசு மேற்கொண்ட சாதனைகளாக நேற்று முதல்வர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சட்டமன்றத்திலும், இந்த 100 நாள் ஆட்சி குறித்து பேசப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் சுமார் 200 கொலைகள், 10-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள், சுமார் 400 பாலியல் குற்றங்கள், தினம்தோறும் 2.5 வயது குழந்தை முதல் 85 வயது முதியவர் வரை பாலியல் வன்கொடுமை கொலைகள், 10-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் எனத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றிய விஜய் அவர்களே! நினைவிருக்கிறதா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

"ஓவ்வொரு காவல் நிலைய மரணமும் அந்த ஆட்சியின் தோல்வி" என உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மறந்து உங்கள் தோல்வி ஆட்சித் தொடர வேண்டுமா CM sir? முதல்வரைச் சுற்றியுள்ள நான்கு நண்பர்களும் இயக்குநர்களாக உருவாகி, 100 நாட்களில் விஜய்யை வைத்து ரீல்ஸ் எடுத்து சீரியல் தயாரித்து முதல்வரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களை ரீல்ஸ் பார்க்க வைத்திருப்பது மிகப்பெரிய அவமானமாக இல்லையா CM sir ?

நேற்று, 100-வது நாளில், போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அமுதன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் போதைப்பொருள் கும்பலால் கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்போடு எதிர்க்கட்சித் தலைவருக்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய முதல்வர், சினிமா பாணியில் தனக்குப் பதிலாக ‘டூப்’களை பதில் சொல்ல வைத்து தமிழகத்தையே தலைகுனிய வைத்துவிட்டு ஓடி ஒளிவது வெட்கமாக இல்லையா CM sir ?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

TN Assembly: 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான்!' - அமைச்சர் நிர்மல் குமார் | Live

சட்டமன்றத்தில் இன்றைய நிகழ்வின் போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான். கர்நாடக காவல்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு ... மேலும் பார்க்க

மதுரை பூசாரி காவல் மரணம்: ``ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள்..." - அன்புமணி கண்டனம்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மது... மேலும் பார்க்க

தேஜஸ்வி சூர்யாவுக்கு பதில் ஹேமந்த் ஜோஷி! - பாஜக இளைஞரணி தலைமைக்கு வர உதவிய `டிஜிட்டல் MP' அலுவலகம்

பா.ஜ.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய தலைவர்கள் மீண்டும் கட்சிப்பணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். பா.ஜ.கவின் தேசிய இளைஞரணி(யுவமோர்ச்சா) தலைவராக இருந்த பெங்களூரை ச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் த.வெ.க எம்.எல்.ஏ கபில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார். சோளிங்கர் சுமதி திரையரங்கில் `ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியைப... மேலும் பார்க்க

``5 வருடங்களில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு 100 நாட்களிலே..." - மா.சுப்ரமணியன் காட்டம்

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு புகழஞ்சலி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் இறுதி நிகழ்வாக சோழிங்கநல... மேலும் பார்க்க