``தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" - அப்பாவு கா...
TN Assembly: 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான்!' - அமைச்சர் நிர்மல் குமார் | Live
சட்டமன்றத்தில் இன்றைய நிகழ்வின் போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான். கர்நாடக காவல்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு நேர்மையாக விசாரணை நடத்துவோம் என உறுதியளித்திருக்கிறது." என்றார்,
மேலும் கடலூர் பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.!
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுவது பற்றி அவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ்வின் பதில்.
``இத்திட்டத்தினால், சுற்றுச்சூழல், கடல்சார் உயிரினங்கள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றிற்கு ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் கூர்ந்தாய்வு செய்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்." எனத் தெரிவித்தார்.















