"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவ...
"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா
'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர்.

அவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி, தனது சினிமா பயணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எதுவும் வழக்கமான ஹீரோத்தனமானவை அல்ல. விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதைச் செய்யாமல், எனக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தேன்.
மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொள்ள இதுதான் காரணம். கடன் அடைக்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றேன்.

ஆனால், இன்னும் 20 வருடங்கள் கழித்து அதே டேபிளில் உட்கார்ந்திருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நடிப்பு எனக்குப் புதிய தேடலையும், உண்மையான மகிழ்ச்சியையும் தருகிறது," எனப் பகிர்ந்திருக்கிறார்.
அவர் நடித்திருக்கும் 'எபிக்' திரைப்படம், வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 'தக்ஷகுடு' என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் பார்வைத் திறன் சவால் கொண்ட இளைஞனாக நடிக்கிறார்.
















