செய்திகள் :

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:``Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" - நயினார் நாகேந்திரன்

post image

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் (26) என்பவர் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அந்த இளைஞரை காவல் ஆய்வாளர் அறைந்திருக்கிறார். உடனே இளைஞரும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

காவல்துறை - இளைஞர் மோதல்
காவல்துறை - இளைஞர் மோதல்

இந்த விவகாரம் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே! தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட்ட திரு. ஆகாஷ் என்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவின்போது, காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, திரு. ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்குச் சரியெனப் படுகிறது. காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரைத்தான் காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.

அல்லது அறிவிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களிடம் பொறுமையாகp பேசி, மாற்று வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். அதற்காக, காவலர்கள் மீதான வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதேபோல், விசிகவினரின் Public Nuisance-ஐ தட்டிக் கேட்டவரை, அதிகாரத்தின் ஆணவத்தில் சில காவலர்கள் அச்சுறுத்தி, அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. அதிலும், அத்தனை காவலர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, வம்படியாக காவலர் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்தாலே மனம் பதறுகிறது.

சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோருக்கே தமிழக காவல் நிலையங்களில் அடிக்கடி ‘வழுக்கி விழுந்து’ எலும்பு முறிவுகள் ஏற்படும் நிலையில், திரு. ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிருக்கும் உடமைக்கும் ஆரோக்கியத்திற்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்!

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயு... மேலும் பார்க்க

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC CGL) நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ... மேலும் பார்க்க

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

மேகமலை: "6000 குடும்பங்களின் வாழ்வாதாரம்; விரைந்து நடவடிக்கை வேண்டும்" - அரசுக்கு விசிக வலியுறுத்தல்

மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அகற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விச... மேலும் பார்க்க

உயிரோடிருப்பவருக்கு போலி இறப்புச் சான்றிதழ்; 'சொத்தை அபகரிக்கவா?' - கலெக்டர் காலில் விழுந்த மூதாட்டி

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது கணவர் மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் மருகளுடன் வசித்து வந்துள... மேலும் பார்க்க

``தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" - அப்பாவு காட்டம்

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த அரசு மேற்கொண்ட சாதனைகளாக நேற்று முதல்வர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சட்டமன்றத்திலும், இந... மேலும் பார்க்க