செய்திகள் :

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் - ட்ரம்ப் பிளான்!

post image

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியது.

அதன் பின், 2003-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

ஆனால், அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல்கள் நடந்து வருகின்றன.

அங்கேயும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அடையாள அட்டை

இத்துடன் இந்தியாவைப் போல அமெரிக்காவில் வாக்காளர் அட்டை எல்லாம் இல்லை. அவர்கள் அங்கே இருக்கும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காட்டி வாக்களிப்பார்கள்.

சில மாநிலங்களில் அடையாள அட்டைக்கூட தேவையில்லை.

தற்போது இந்தியாவைப் போல, அமெரிக்காவிலும் வாக்காளர் அட்டை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசாங்கம் கருதுகிறது.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

“இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நமது நிர்வாகத்திடம், ‘புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

கடந்த இந்தியத் தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்! அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

மேலும் வாக்களித்த ஒவ்வொருவரிடமும் ஒரு புகைப்பட அடையாள அட்டை இருந்தது. நாம் உடனடியாக ‘Save அமெரிக்கா சட்டத்தை’ நிறைவேற்ற வேண்டும்!”

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:``Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" - நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் (26) என்பவர் தொடர்ந்து ஹாரன் அடித்துள... மேலும் பார்க்க

‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்!

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயு... மேலும் பார்க்க

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC CGL) நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ... மேலும் பார்க்க

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

மேகமலை: "6000 குடும்பங்களின் வாழ்வாதாரம்; விரைந்து நடவடிக்கை வேண்டும்" - அரசுக்கு விசிக வலியுறுத்தல்

மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அகற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விச... மேலும் பார்க்க

உயிரோடிருப்பவருக்கு போலி இறப்புச் சான்றிதழ்; 'சொத்தை அபகரிக்கவா?' - கலெக்டர் காலில் விழுந்த மூதாட்டி

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது கணவர் மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் மருகளுடன் வசித்து வந்துள... மேலும் பார்க்க