செய்திகள் :

TNPL 2026 : கோவை கிங்ஸின் கெத்து பவுலிங் - பேட்டிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.!

post image

TNPL 2026 தொடரின் 21-வது லீக் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ்.

டாஸ் வென்ற கோவை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அவர்களின் தேர்விற்கு ஏற்ப பவுலர்களின் செயல்பாடு மிக கட்சிதம். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பேட்டிங்கை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டனர்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் சொதப்பல், சூப்பர் கில்லீஸை பாதிப்பை நோக்கி நகர்த்தியது. மோகித் ஹரிஹரன் 13(9) ரன்களில் அவுட் ஆக, கேப்டன் ஜெகதீசனும் பவுலரின் கையிலேயே பூ மாதிரி கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராம் அரவிந்த் பவுலர்களின் கண்ணில் கொஞ்ச நேரம் மண்ணைத் தூவி விட்டு சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்துக் கொடுத்த வலு சேர்த்தார். இருந்த ஒரு நம்பிக்கையும் 63(32) ரன்கள் எடுத்து வெளியேறியது.

அடுத்தடுத்து வந்தவர்களும் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். தினேஷ் ராஜ் தனது பங்கிற்கு 32(18) ரன்கள் எடுத்து தந்து பின் அவரும் டாட்டா சொல்லிச் செல்ல 19.3 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை இலக்காக வைத்தது. கோவை கிங்ஸ்-ன் பவுலர் ஆர்.எஸ்.அம்ரிஸ் 3 ஓவர்களுக்கு 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த பலம் தந்திருந்தார்.

TNPL

பின் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியின் எஸ் ராதாகிருஷ்ணன் 3 சிக்சர் 3 பவுண்டரிகள் என ஒரு பவுசான ஓப்பனிங்கை கொடுத்து 38(18) ரன்களில் வெளியேறினார். பின் எஸ்.லோகேஸ்வரன் மற்றும் பி.சச்சினின் கூட்டணி 60 ரன்களை எடுத்து வலுபடுத்தியது. பின் பி.சச்சின் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 25(11) சிறிய மின்னல் ரன்களை காட்டி விட்டுச் செல்ல.. கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்று "பிளே ஆஃப்" செல்வதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

சிறப்பாக பவுலிங் வீசிய ஆர்.எஸ் அம்ரிஸ் 'மேன் ஆஃப் தி மேட்ச்' பெற்றார்.

வரலாற்றுச் சாதனை: 23 ஆண்டுக்கால காத்திருப்பு; ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட்டை வென்ற வங்கதேசம்!

Qqடார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவ... மேலும் பார்க்க

TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த... மேலும் பார்க்க

TNPL 2026: ராணிப்பேட்டையிலிருந்து TNPL வரை; அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசிய ஹரி ராகவேந்திரா!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.திண்டுக்கல் நத்தம... மேலும் பார்க்க

TNPL 2026 : ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும்.!

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,சேப்பாக் சூப்பர் கில... மேலும் பார்க்க

TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! நடந்தது என்ன?

TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க

TNPL: ஒருபக்கம் லாஸ்ட் ஓவர் திக் திக்; மறுபக்கம் `196' மிரட்டல்! - திருச்சி, நெல்லையின் தரமான வெற்றி

“இன்னும் மேட்ச் முடியலப்பா!” — ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்களை இப்படித்தான் சொல்ல வைத்தது.. ஒருபுறம் கடைசி ஓவர் வரை திக்... திக்... என நகர்ந்த நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் ம... மேலும் பார்க்க