செய்திகள் :

திருப்பனந்தாள் குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்: நீங்காத புகழ் கிடைக்க அருளும் தலம்!

post image

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்பனந்தாள். இதற்கு மிக அருகிலுள்ள கிராமம் குறிச்சி. இங்குள்ள ஆலயம்தான் ஶ்ரீகல்யாண கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோயில். இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றும் தற்போது உள்ள ஆலயம் நாயக்கர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கட்டுமானம் என்றும் சொல்கிறார்கள்.

முற்காலத்தில் இது ராமருக்காக எடுக்கப்பெற்ற கோயிலாகவே இருந்துள்ளது. பின்னர் மூலஸ்தானத்தில் ஶ்ரீலட்சுமி நாராயணரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். இங்குள்ள சீதை, லட்சுமண சமேதராகக் காட்சி தரும் ஶ்ரீகல்யாண கோதண்டராமரைக் காண்பதே பரவசம்.

குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்
குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்

வசிஷ்ட முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் இங்கு திருக்கல்யாண ரூபத்துடன் ஶ்ரீராமராகக் காட்சியளித்து அருளினார் என்பது தலபுராணத் தகவல். இங்கு வந்து வழிபட்டால் நீங்காதப் புகழ் உண்டாகும் என்கிறார்கள்.

பொதுவாக `ராமருக்கும் மூத்தது ராமநாமம்' என்று சொல்வார்கள். இந்தத் தலத்தில் ஶ்ரீராம நாம ஜபம் செய்வதால் உண்டாகும் பலன்கள் அளப்பரியவை!

திரேதா யுகத்திற்கு முன்பே... அதாவது ராமாவதாரத்திற்கு முன்பே இத்தலத்தில் ஏழு தங்க மந்தாரைக் கொக்குகள் ராமநாம ஜபம் செய்திருப்பதாகப் புராணத் தகவல்கள் மூலம் அறிகிறோம். சூரிய பகவானின் ஏழு ஒளிக் கிரணங்கள்தான், ஏழு தங்க மந்தாரைக் கொக்குகளாகப் பூமியில் பிரவேசித்ததாகக் கூறுகின்றனர். இது கௌதம முனிவரின் வாக்கு என்றும் சொல்கிறார்கள்.

இன்றளவும் சப்தமி திதியும் புனர்பூச நட்சத்திரமும் இணைந்து அமைகின்ற தினங்களில் இந்த ஏழு கொக்குகளும் முனிவர் கூட்டத்துடன் இணைந்து இவ்வாலயத்தில் ராமநாம ஜபம் செய்வதாக ஐதிகம். ``சென்ற தலைமுறை வரையிலும், விசேஷமான தினங்களில் இவ்வாலயத்தில் ராம நாம ஜபம் செய்து சிறப்பித்துள்ளார்கள்'' என்கிறார்கள் பக்தர்கள்.

குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்
குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்

இப்படி புனர்பூச - சப்தமி தினத்தில் ராமநாம ஜபம் செய்த கௌதம மகரிஷிக்கு, திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் திருமால் தரிசனம் இத்தலத்திலேயே கிடைத்திருக்கிறது. அதாவது ராமராகவும், கிருஷ்ண ராகவும் இரண்டுவிதமான தரிசனமும் கிடைத்திருக்கிறது என்பது அபூர்வமான தகவல்.

இதற்கு சாட்சி சொல்வது போல சுற்றாலையில் பாமா - ருக்மிணி சமேதரராக ஶ்ரீகிருஷ்ணருக்கும் சந்நதி உள்ளது.

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களையும் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பார்கள். ஆயுள் விருத்தி, நோய் நிவர்த்தி, சத்புத்திரபிராப்தி, விவாகபிராப்தி ஆகியவற்றைத் தரக்கூடிய இப்புண்ணிய காலத்தில் இவ்வாலயத்தில் வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம் என்கின்றனர்.

புராணக் காலத்தில் இப்பகுதி நெல்லி மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இங்கு அன்னை மகாலட்சுமி தவமிருந்ததாக ஐதிகம். எனவே இத்தலமானது `லட்சுமிபுரம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல திருமகளின் அம்சமான நெல்லி விருட்சம் தோன்றியதும் இத்தலத்தில்தான் எனவும் ஒரு தகவல் உண்டு.

நெல்லிமரம் என்பது திருமாலின் அம்சம். எனவேதான் நெல்லிக்கனி லக்ஷ்மியானவள் விருப்பத்துடன் உறையும் பொருள் ஆயிற்று என்கின்றன மறைநூல்கள். நெல்லிமரத்திற்கும் துளசிச்செடிக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்து கொண்டாடும் வழக்கம் உண்டு. இத்தகு சம்பிரதாயம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த தலம் இதுதான் என்கிறார்கள் இங்குள்ளவர்கள்.

குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்
குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்

தம்முடைய அவதாரத்திற்கும் முன்பிருந்தே தம்மை ராமநாம ஜபத்தினால் வழிபட்டுக் கொண்டிருந்த தங்க மந்தாரைக் கொக்குகளுக்கு ஶ்ரீராமர் இத்தலத்தில்தான் பெயர் சூட்டி அருளியிருக்கிறார். தவிர, அனுமன் வேண்டியதற்கு இணங்கி, ராமபிரான் வானரர்களுக்கு தனது திருக்கரங்களால் காதணிகளை அணிவித்து அருளியதும் இந்தத் தலத்தில்தான்.

எனவே இத்தலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், காது குத்துதல் முதலான வைபவங்களை நிகழ்த்தினால் அவர்களின் வாழ்வு வளம் பெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

இந்த ஆலயதைப் பற்றிய ஏராளமான செய்திகள் அடங்கிய சுவடிச் செய்திகளைத் தொகுத்து `லட்சுமிபுர மகாத்மியம்' என்ற நூலாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள். மிகப் பழைமையான அந்த நூலினைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடந்த 1999-ல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலம் இந்நூல் வெளியிடப்பட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

முழுக்க முழுக்க செங்கல் திருப்பணியால் ஆக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான கோயில் இது. பெரிய ராஜகோபுரம், உயர்ந்த மதில் சுவர்கள் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் கூடிய பாரம்பர்யமான கோயில் இது. தற்போது, மகிமை மிக்க இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பிருப்பவர்கள் அங்கு சென்று வழிபடுவதோடு திருப்பணிகளிலும் கலந்துகொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

தஞ்சை மாவட்டம் அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் கோயில்: பணக்கஷ்டம் தீர்க்கும் தலம்!

சோழநாட்டுக் காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று அரிசிற்கரைப்புத்தூர். இத்தலத்தின் புராணப் பெயர் அழகாப்புத்தூர். தேவாரப் பாடல்பெற்ற இந்தத்தலத்தில்தான் புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு தந்து இறைவன் ஆட்கொண்... மேலும் பார்க்க

கோவை: கழுதைகளுக்கு நடந்த திருமணம் – மழை வேண்டி நூதன வழிபாடு!

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி!

சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாக... மேலும் பார்க்க

சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!

சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.!

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.! மேலும் பார்க்க

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் ஆடி அமாவாசை; பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு | Photo Album

பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில... மேலும் பார்க்க