'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும...
TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! - முதல்வர் விஜய் | Live
"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். அதன்படி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.


தவிர பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு ஒரு லிட்டர் பால் ரூ.38ல் இருந்து ரூ.41-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.


















