செய்திகள் :

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

post image

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த சில நாள்களிலேயே அவரிடமிருந்து பதவியைப் பறித்தார்.

அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளராகப் பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்த கப்பச்சி வினோத் த.வெ.க-வில் இணைந்ததால் பால. நந்தகுமார் இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராகப் பதவிவகித்து வருகிறார்.

பால. நந்தகுமார்
பால. நந்தகுமார்

த.வெ.க அரசின் 100 நாள் ஆட்சி குறித்து தெரிவித்துள்ள அவர், "தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க பத்து சீட்டுகளுக்கு மேல் ஜெயித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனச் சவால் விட்டிருந்தேன். மாயாஜாலம் ஏதோ செய்து 108 வாங்கி ஆட்சியும் அமைத்துவிட்டார்கள்.

100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதைத் தொடர்ந்து நேற்று மீசையை எடுத்துக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டு புகைப்படங்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தேர்தலில் த.வெ.க 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால் மீசையை மழித்துக் கொள்வேன் எனப் பிரசாரக் கூட்டங்களில் விடுத்த சவாலில் தோற்றதால் மீசையை மழித்துக் கொண்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது.

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' - தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரிக் ... மேலும் பார்க்க

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" - முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துக்கள் ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா... மேலும் பார்க்க

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்CM Vijayதொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வ... மேலும் பார்க்க

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! - முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வ... மேலும் பார்க்க