செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் குருவலட்சுமிக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த குருவலட்சுமி - கைது செய்யப்பட்ட சின்னகெங்குராஜ்
உயிரிழந்த குருவலட்சுமி - கைது செய்யப்பட்ட சின்னகெங்குராஜ்

இந்த விவகாரம் குருவலட்சுமியின் கணவருக்குத் தெரிய வர இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக குருவலட்சுமி கணவரைப் பிரிந்த வாழ்ந்து வந்துள்ளார்.  

இந்த நிலையில், குழந்தைகள் வளர்ந்த நிலையில், அவர் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி காலை 9 மணியளவில், குருவலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற சின்ன கெங்குராஜ், அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். மேலும், குருவலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் 45 சதவீதம் தீக்காயமடைந்த குருவலட்சுமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

பசுவந்தனை காவல் நிலையம்

இதுகுறித்து பசுவந்தனை போலீஸார் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சின்ன கொங்குராஜைக் கைது செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை ... மேலும் பார்க்க