செய்திகள் :

கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்!

post image

கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதிய வேளையில் அங்குள்ள ஒரு வீட்டில் தொழிலாளர்கள் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்றவைத்தபோது, எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும், அது கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்து இருந்த தகர வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேறினர்.

தீ விபத்து
தீ விபத்து

தீயின் தாக்கம் தீவிரமடைந்ததால், வீடுகளுக்குள் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் 50க்கும் மேற்பட்ட தகர வீடுகள் தீக்கிரையாகின. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் 60-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், குடியிருப்புக்குள் வெடிக்காமல் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து
தீ விபத்து

இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கனேசன் கூறும் போது, “விபத்து நடந்த இடத்தில் சுமார் 40 முதல் 50 சிலிண்டர்கள் வரை வைக்கப்பட்டிருந்தன. அதில் வெடிக்காத நிலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் தீயணைப்பு வீரர்கள் மூலம் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்துள்ளோம். இத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தினுள் இருக்கும் வெப்பம் மற்றும் புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினர் அப்பகுதியைப் பாதுகாப்பில் கொண்டு வந்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. நேப... மேலும் பார்க்க

Nepal: ”கடைசியாக எடுத்த போட்டோவை அனுப்பினார்” - அம்மாவைப் பற்றி தகவல் கிடைக்காததால் மகன் வேதனை

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கடந்த 23ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட... மேலும் பார்க்க

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதல்; இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழப்பு - குளித்தலை சோகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (48). இவர், கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வென்டிலேட்டர் வெடித்து மருத்துவமனையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் வெண்டிலேட்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்துக்கொண்டது. மருத்துவ... மேலும் பார்க்க

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க

தஞ்சை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர்; காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் பலியான சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில்... மேலும் பார்க்க