செய்திகள் :

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்... ட்ரம்ப் அரசின் முடிவால் பிரச்னை!

post image

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை இழந்த பிறகு சட்டப்பூர்வமாகத் தங்குவதற்காக வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச 60 நாள் அவகாசத்தை (Grace Period) முற்றிலுமாக நீக்குவதற்கான புதிய விதிமாற்றத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS-Department of Homeland Security) தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நடைமுறை என்ன?

தற்போது H-1B, L-1, O-1 உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை வைத்துள்ளவர்கள் திடீரென வேலை இழந்தால், அதிகபட்சம் 60 நாள்கள் அல்லது விசா அனுமதிக் காலம் முடியும் நாள், இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்திற்குள் புதிய வேலை வழங்குநரைத் (Employer) தேடுவது, விசா நிலையை (Visa Status) மாற்றுவது அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகையின் பரிசீலனை

இந்த 60 நாள் அவகாசத்தை முழுமையாக ரத்து செய்யும் விதமாக, “Eliminating the Discretionary 60-day Grace Period” என்ற முன்மொழிவைத் திட்டத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (DHS), குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவும் (USCIS) இணைந்து தயாரித்துள்ளன. இந்த முன்மொழிவு மீதான சட்டப்பூர்வ மதிப்பீடுகளை வெள்ளை மாளிகையின் ஒழுங்குமுறை விவகார அலுவலகம் (OIRA - Office of Information and Regulatory Affairs) தற்போது நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இது இப்போதைக்கு அமலுக்கு வந்த இறுதி விதி அல்ல; பொதுமக்களின் கருத்துக்கேட்பு உள்ளிட்ட அடுத்தடுத்த விதிமுறை நடைமுறைகள் இன்னும் பாக்கியுள்ளன.

இந்தியர்கள் மீது என்ன தாக்கம்?

அமெரிக்காவின் திறமையான பணியாளர் பிரிவில் (Skilled workforce) H-1B விசா மூலம் பணிபுரிபவர்களில் இந்தியர்களின் பங்கு மிக அதிகம். திடீரென வேலையை இழக்கும் ஒருவருக்கு, புதிய வேலை தேடவும் தனது விசா பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த 60 நாள்கள் ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணாக (Buffer) விளங்கி வருகிறது.

ஹெச்-1பி விசா | H-1B Visa
ஹெச்-1பி விசா

இந்த அவகாசம் முற்றிலுமாக நீக்கப்பட்டால், வேலை இழந்த உடனேயே குடியேற்ற நிலை தொடர்பான கடும் மன அழுத்தம் பணியாளர்களுக்கு ஏற்படும். புதிய வேலை வழங்குநர், குடும்பம், குழந்தைகளின் கல்வி, வீட்டு வசதி போன்ற வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கிய முடிவுகளை எந்தவித அவகாசமும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.

அடுத்தகட்ட நிலை என்ன?

தற்போதைக்குப் பழையபடி 60 நாள் அவகாச முறை நடைமுறையில்தான் உள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு எதிர்வரும் காலங்களில் இறுதி விதியாக உருவெடுத்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய நிபுணர்களின் வேலை மற்றும் விசா பாதுகாப்பில் இது மிகப்பெரிய சவால்களை உருவாக்கக்கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் முதல் த... மேலும் பார்க்க

65 பில்லியன் பேரல் எண்ணெய்... டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றில... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், நோயிலிருந்து குணமடையவும் மருத்துவமனையை நாடி வரும் மக்களுக்கு, அந்த மருத்துவமனை வளாகமே சுகாதாரமான சூழலை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், திருவாரூர் அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம்

தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்ப... மேலும் பார்க்க

'நானே மாடுபிடி வீரர்தான்...!' - சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருக... மேலும் பார்க்க

பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்தக்கட்சியினரின் நெருக்கடியால் பொறுப்பேற்ற 25 நாட்களில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.சி... மேலும் பார்க்க