செய்திகள் :

'அப்பா, அம்மாவை தனியாக விட்டுவிடாதே' - ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு

post image

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்‌ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது சகோதரி அவருக்கு ராக்கி கயிறு கட்டினார். அதன் பிறகு தனது தந்தையின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ரோஹித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மொபைல் போன் மற்றும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ரோஹித் அதில் அதிக அளவு பணத்தை இழந்தார்.

இதையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அக்கா, அப்பா மற்றும் அம்மாவை தனியாக விட்டுவிடாதே, நான் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்கொலை தடுப்பு மையம்

ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்துவிட்டதாக ரோஹித் தனது நண்பருக்கு ஒரு வீடியோ அனுப்பி இருந்ததும் தெரிய வந்தது. சோசியல் மீடியா பதிவு மற்றும் நண்பருக்கு அனுப்பப்பட்ட வீடியோவை பார்த்து அவர்கள் ரோஹித் வீட்டிற்கு ஓடி வந்தனர். ஆனால் ரோஹித் அதற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் அதற்குள் இறந்திருந்தார். ரோஹித் இறப்பதற்கு முன்பு உணர்ச்சிப்பூர்வமாக மற்றொரு பதிவையும் வெளியிட்டு இருந்தார். அதில், "அடுத்த முறை வரும்போது எல்லோருக்கும் பிடித்தவனாக மாறுவேன். மீதி இருக்கும் கறைகளை துடைப்பேன். கண்கள் ஈரமாகாது, யாருடைய இதயத்திலிருந்தும் எதையும் பறிக்க மாட்டேன்..." என்று குறிப்பிட்டு இருந்தார். ரோஹித் மறைவு அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகு... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து ப... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும்... மேலும் பார்க்க

மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய்... மேலும் பார்க்க

சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஆந்திராவில் மீட்பு - தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி பவித்ரா. இவருக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ரௌடியான `குள்ள' கணேஷ், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறைய... மேலும் பார்க்க