செய்திகள் :

'நானே மாடுபிடி வீரர்தான்...!' - சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

post image

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அவரையே தொடர்புகொண்டு இந்த பேச்சு குறித்து கேட்டோம்.

கருப்பையா
கருப்பையா

எம்.எல்.ஏ கருப்பையா கூறியதாவது, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அந்தந்த ஊர்களில் அதன் பாரம்பரியம் மாறாமல் நடப்பது. ஊர் மக்கள் திரண்டு நிற்க வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் அழகு. அதுதான் வீரம்.

இவர்கள் அந்த விளையாட்டின் தன்மையையே உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஆட்டத்தை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. அப்படி மைதானம் கட்டியதற்கு பதிலாக செலவு செய்து சர்க்கரை ஆலையை திறந்திருந்தால் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்றே கூறினேன். சொல்லப்போனால், நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது.

கருப்பையா
கருப்பையா

திமுக ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை என வந்தபோது, ஜெயலலிதா அம்மாவுக்கு கடிதம் எழுதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறேன். மேலும், எங்களின் தவெக இளைஞர்களின் சக்தியால் வென்ற கட்சி. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்படி பேசுவேன். அவையில் எனக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்திருந்தால் தெளிவாக பேசியிருப்பேன்' என்றார்.

'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம்

தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்ப... மேலும் பார்க்க

பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்தக்கட்சியினரின் நெருக்கடியால் பொறுப்பேற்ற 25 நாட்களில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.சி... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு?" - தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, ``அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட... மேலும் பார்க்க

``தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல்" - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் அரங்கேறுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,`` தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி,... மேலும் பார்க்க

``அடுத்தப் பிரதமர் யார்?" - கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்க... மேலும் பார்க்க