செய்திகள் :

மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

post image

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29)  காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்

திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல்மகள் வென்சியா (26) இருவருக்கும் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று  காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வென்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காமலாபுரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் -  மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில்  சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக கோயமுத்தூரில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் இடது பக்க முன் டயர் வெடித்ததால் கார் நிலை குலைந்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வென்சியா

இதில் ஜெப பாஸ்டினும் வென்சியா வும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மணப்பெண் வென்சியா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தசம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டிடத்தில் தீ விபத்து!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகேயுள்ள மேற்கு கோபுர வீதி பகுதியில் 1939ஆம் ஆண்டு முதல் பழமையான சென்ட்ரல் தியேட்டர் செயல்பட்டுவந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் போதிய ரசிகர்கள் வருகையின்... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருக... மேலும் பார்க்க

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க