செய்திகள் :

Brothers And Sisters: `இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு திட்டுறாங்க' - புரொமோதினி ஷேர்ஸ்

post image

ஜியோ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரிஸ் `Brothers And Sisters'. இந்த சீரிஸில் `கிரிஜா' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் புரொமோதினி. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

`Brothers And Sisters' promodini

" தமிழ்ல என்னோட என்ட்ரி விகடன்லதான் ஆச்சு. `ரன்' சீரியலில் நடிச்சிருந்தேன். அப்புறம் ரொம்ப பிரேக் ஆகிடுச்சு. திடீர்னு இந்த சீரிஸூக்காக அழைப்பு வந்துச்சு. முதல்ல `பொன்மலர்' கேரக்டருக்காகத்தான் என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. அதுக்காக ஆடிஷன் பண்ண பிறகு கிரிஜான்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு அதுக்கும் ஆடிஷன் கொடுங்கன்னு சொன்னாங்க. அப்ப எனக்கு இந்த கேரக்டர் பத்தி எதுவும் தெரியாது. டைரக்டர் சிதம்பரம் சார் நான் கிரிஜா கேரக்டருக்கு செட்டாவேன்னு சொன்னார். 

தெலுங்குல நான் ரொம்ப நல்ல அம்மாவாகவும், பாசிட்டிவ் ரோலிலும் தான் நடிச்சிருக்கேன். எங்கேயாச்சும் தப்பா போயிடுமோங்கிற தயக்கம் இருந்துச்சு. டைரக்டர் சார் தான், `நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இதை ரொம்ப அழகா டிசைன் பண்ணியிருக்கோம்'னு சொன்னார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த மாதிரி பர்ஃபார்ம் பண்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். பர்ஃபார்மன்ஸ் பண்ண நிறைய இடம் இருக்கு. இந்த கேரக்டர் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப ஹாப்பி!" என்றவரிடம் பர்சனல் லைஃப் குறித்துக் கேட்டோம்.

`Brothers And Sisters' promodini

" என்னோட சொந்த ஊர் பெங்களூர். குழந்தை நட்சத்திரமா கன்னட மொழியில் அறிமுகமானேன். நானும் என் சிஸ்டர் பிராஷ்ந்தினியும் ட்வின்ஸ். அம்மாவுக்கு எங்களை பரதநாட்டியத்தில் பெரிய ஆளாக்கணும்னு ஆசை. இப்ப என் தங்கை யூஎஸ்ல பரதநாட்டியம் கத்துக் கொடுத்துட்டிருக்காங்க. நான் கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தேன். பிறகு மறுபடி கம்பேக் கொடுத்து இப்ப வரைக்கும் பிசியா நடிச்சிட்டிருக்கேன். என் கணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அதான் இவ்ளோ சரளமா தமிழ் பேசுறேன். அவர் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்க. பெங்களூர்ல காலேஜ் படிச்சிட்டிருக்காங்க!" என்றவரிடம் `36 வயதினிலே' ஜோதிகா மாதிரி இருக்கீங்கங்கிற கமென்ட் குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார்.

" `இவங்களுக்கு ஜோதிகான்னு நினைப்பு'னுலாம் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லைங்க சிலர் அப்படி சொல்றாங்க. ஒரு விதத்துல பெரிய ஆர்ட்டிஸ்ட்டோட கம்பேர் பண்றது ஹாப்பின்னாலும் ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆக புரொமோதினியா தெரியணும்னு தான் விரும்புறேன்!" என்றவர் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறித்து பகிர்ந்து கொண்டார்.

`Brothers And Sisters' promodini

" சிலர் இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு சிலர் திட்டுறாங்க. ஆனா, அதுவும் எனக்கு பிடிச்சிருக்கு. ஏன்னா, அந்த அளவுக்கு மக்கள் மனசுல கிரிஜா கேரக்டர் பதிஞ்சிருக்குன்னு சந்தோஷம்! இன்னும் சிலர் என் நடிப்பு நல்லா இருக்குன்னும் என்னோட காஸ்டியூம்ஸ் நல்லா இருக்குன்னும் சொல்லுவாங்க!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து புரொமோதினி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்! 

`கனத்த இதயத்துடன்...' - சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் நவீந்தர் திமுகவிலிருந்து வெளியேறியது ஏன்?

திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் பிளாக் பாண்டி! - காரணம் என்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது.எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்... மேலும் பார்க்க

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிக... மேலும் பார்க்க

BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்ப... மேலும் பார்க்க