செய்திகள் :

Bigg Boss Tamil 10: சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் பிளாக் பாண்டி! - காரணம் என்ன?

post image

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது.

எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையிலிருந்தபடியே வெளியேறினர்.

அப்படி இந்த சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் சீரியல் நடிகை ஷப்னம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

அவர் பிளாக் பாண்டி.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் விசாரித்த போது உடல்நலனைக் காரணம் காட்டி அவரது வெளியேற்றம் நிகழ்ந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்டி வெளியேறியதால் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.

அதேநேரம் பாண்டி வைல்டு கார்டு என்ட்ரிமூலம் நிகழ்ச்சிக்குள் திரும்பவும் செல்ல நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

இந்த சீசனில் முதல் நாளிலேயே பலர் வெளியேறிய போது அவர்கள் சிலரிடம் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கிறட்து, பார்த்துக் கொள்ளலாமென சொல்லப்பட்டதாம்.

தவிர நடிகை ஆனந்தி உள்ளிட்ட சிலர் முதல் நாள் செல்வதாக இருந்து, கடைசி நிமிடத்தில் அது நடக்காததால் அவர்களுக்குமே வைல்டு கார்டு கதவு திறந்திருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில் பிளாக் பாண்டியும் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார். பார்க்கலாம், யாருக்கு வைல்டு கார்டு கதவு திறக்கிறதென.!

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிக... மேலும் பார்க்க

BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்ப... மேலும் பார்க்க

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்; அதிரடி தொடக்கம்!

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பா... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: "என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் பெருசா பார்த்ததில்ல" - குமரன் பேட்டி | Exclusive

விஜய் டிவியில் ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10' கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் பொறுப்பை முதன்முறையாக பார்வையாளர்களிடம் கொடுத்துள்ளனர். என்ட்ரியாகு... மேலும் பார்க்க